முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டின் அரேக்கிப்பா மாகாணம் ஷலா நகரில் இருந்து நேற்று முன்தினம் பேருந்து புறப்பட்டது. அரேக்கிப்பா நோக்கி புறப்பட்ட அந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், ஷலா நகரில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வந்த கார் மீது பேருந்து மோதியது. இந்த சம்பவத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து