எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பாபர் மசூதி இடிப்பு தினமான வரும் டிசம்பர் 6-ம் தேதி தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ம் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த சுவரொட்டிகள் மீது ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் பயங்கரவாதிகளின் குற்றப்பயணத்தை பின்தொடர வழிவகுத்தது.
போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய மருத்துவக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இர்பான் அகமது என்பவரையும், ஒரு டாக்டரையும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் டாக்டர் அதீல் ராதர் கைது செய்யப்பட்டார். இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்துக்கு பிறகுதான் அரியானா மாநிலத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் தங்களது விசாரணையை அரியானாவில் தொடர்ந்தபோது பரிதாபாத்தில் டாக்டர் முசமில் ஷகீலும், பெண் டாக்டர் ஷாகீத்தும் பிடிபட்டனர். முசமில் ஷகீலின் அடுக்குமாடி அறையில் இருந்து 360 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. இந்தநிலையில்தான் 10-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. பயங்கரவாத டாக்டர் குழுவில் இணைந்திருந்த உமர் முகமது, தான் விலைக்கு வாங்கிய ஹூண்டாய் ஐ-20 காரில் வெடிபொருட்களை எடுத்துச்சென்று செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்துள்ளார். இந்த கார் அன்றைய தினம் டெல்லியில் சுற்றிய காட்சிகள் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் எடுக்கப்பட்டு, அதில் உமர் முகமது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் 2 கார்களை உமர் முகமது வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அதனை தேடினர். இதில் ‘போர்டு’ நிறுவனத்தின் ’ஈகோஸ்போர்ட்’ என்ற சிவப்பு நிற காரும் ஒன்று. அந்த காரின் பதிவு எண்ணை டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநில போலீசாருக்கு அனுப்பி தேடச் செய்தனர்.
இந்தநிலையில் அந்த காரை போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடித்தனர். அரியானா மாநிலம் கண்டவாலி கிராமத்துக்கு அருகே அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை பரிதாபாத் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதுதவிர மேலும் ஒரு காரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் முகமதுவின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. உமர் முகமது தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ளது. சம்பவத்திற்கு முன்பாக செங்கோட்டை அருகே ராம்லீலா மெய்டன் ஆசாம் அலிசாலையில் உள்ள ஒரு மசூதியில் டாக்டர் உமர் தங்கியிருந்ததாக தெரிகிறது. அதன்பிறகே அவர் செங்கோட்டை அருகே காரில் சென்றுள்ளார்.
3 கார்கள் வாங்கப்பட்டதை கவனிக்கும்போது அவற்றை டெல்லியில் ஆங்காங்கே நிறுத்தி வெடிக்க வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் ஒத்திகை பார்த்திருப்பதாகவும் தெரிகிறது. வெடித்து சிதறிய கார் கடந்த தீபாவளிக்கு முன்பு செங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் முசமில் ஷகீனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின்படி கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அவர் பல முறை டெல்லி செங்கோட்டை பகுதிக்கு வந்துசென்றுள்ளார். எனவே அவர் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாகத்தான் செங்கோட்டையை சுற்றி பார்த்ததும் தெரியவந்தது. ஆனால் தீவிர ரோந்துப்பணியால் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்திலும் சதித்திட்டத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. டிசம்பர் 6-ம் தேதி (பாபர் மசூதி இடிப்பு தினம்) கார் வெடிப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால் அடுத்தடுத்து வெடிபொருளை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை போலீசார் முறியடித்து வந்த ஆத்திரத்தில் 10-ம் தேதி உமர் முகமது காரை வெடிக்க செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் மற்றும் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து செங்கோட்டை பகுதியில் சுற்றி வந்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


