முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025      விளையாட்டு
PV-Sindhu 2023 08 02

உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.வி.சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் மற்றும் 2020 முதல் உலக பேட்மிண்டன் சம்மேளன இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இந்தியாவுக்காக பி.வி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கைதாகும் ஆர்.சி.பி. வீரர் ?

ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் யாஷ் தயாள் மீது உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

இந்த பரபரப்பு முடிவடைவதற்குள் யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், கிரிக்கெட்டில் தன்னை வளர்த்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக யாஷ் தயால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து யாஷ் தயாள் தரப்பில் ஜெய்ப்பூரில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில், யாஷ் தயாளுக்கு முன்ஜாமீன் வழங்க ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு மறுத்துள்ளது. இந்த கட்டத்தில் ஜாமீன் வழங்கினால் , விசாரணை பாதிக்கப்படும் எனவும் வழக்கின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்க முடியாது என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனால் யாஷ் தயாள் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது.

மவுனம் கலைத்தார் பவுமா

தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார். இது குறித்து பவுமா கூறியதாவது:- என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். போட்டி முடிந்த பிறகு மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப்பண்ட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள். 

அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவாக இருக்கும் என்று எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன். மைதானத்தில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால் நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை. எனது பயிற்சியாளர் தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு பவுமா கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து