முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2025      இந்தியா
C P -Radhakrishnan 2025-03-

புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு  துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- விடுதலைப் போராட்ட வீரராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அயராது போராடிய போராளியாகவும் திகழ்ந்து, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவராக விளங்கும் நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பாராளுமன்றத் தேர்தல் வெற்றியின் போது, “எல்லா வெற்றியும் மகிழ்ச்சிக்கு உரியதல்ல ” என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திய மகத்தான தலைவர்.

நேர்மையைப் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு, எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடன் நிறைவாழ்வு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து