முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      இந்தியா
Jail 2024 08 09

ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் நகர் கர்ஜி தெருவைச் சேர்ந்த இளம்பெண் முத்திரெட்டி வாணி (19). இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாகுளத்தில் உள்ள துர்கா தேவி கோவிலில் திருமணம் நடந்தது.பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். விசாகப்பட்டினம் ரெயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் அந்த ரெயிலில் ஏறவில்லை.

இதையடுத்து மனைவியை காணாததால் பதறிய வாலிபர் ரெயிலுக்குள் வாணியை தேடி அலைந்தார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்தார். மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்தனர். அந்த பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு வாணி தப்பிச் சென்றுவிட்டது தெரிய வந்தது. 

இதனால் அவர்கள் கடும் கோபம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மணமகன் குடும்பத்தினருக்கு, இச்சாபுரத்தில் உள்ள தனது அத்தை சந்தியா என்பவர் வீட்டில் வாணி இருப்பதாக தகவல் கிடைத்தது. வாணியை தேடி அங்கு சென்ற அவர்கள், சந்தியாவிடம் தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் போலீசில் வழக்கு தொடர்ந்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திருமணம் ஆகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு, இருவரும் தப்பி விடுவார்களாம். இதுவரை கர்நாடகா, ஒடிசா, கேரளா மாநிலங்களில் திருமணம் ஆகாத 8 இளைஞர்களை இவர்கள் ஏமாற்றியுள்ள தகவல் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாணி, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது 9-வது திருமணத்தில் தான் வசமாக சிக்கி, அவரது வண்டவாளங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து