முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      உலகம்
Trump

நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சிறுமிகளை கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிறருக்கும் தனக்குத்தானேவும் அனுப்பிய மின்னஞ்சல்கள், காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் முன்வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் என சிலர் அளித்த வாக்குமூலமும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுடன் ட்ரம்ப் பேசுகையில், “எப்ஸ்டீன் விவகாரத்தின் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன். உண்மையில், சிலருடன் சேர்ந்து நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் போராடினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து