முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்

Image Unavailable

சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்நிலைகள் அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்தை பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) பால் போல வடிய செய்யும்.

இதைத்தான் வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்கின்றனர். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும். இப்படி பால்வடிகின்ற மரங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும். அதனால்தான் எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை, வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony