முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திர கிரகணம் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Tiruchendur 2024-01-30

Source: provided

தூத்துக்குடி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டது.

இயற்கையாக ஏற்படும் வானியல் நிகழ்வுகளில் கிரகணமும் ஒன்றாகும். இதில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகை கிரகணங்கள் உண்டு. இந்த கிரகணங்கள் ஏற்படும் போது அது மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், நேற்று முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இரவு 9:56 க்கு துவங்கி 1:26 வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கிரகண நேரங்களில் கோவில்களை மூடிவிடுவது வழக்கம். இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி, உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் நடை நேற்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து