முக்கிய செய்திகள்
முகப்பு

95 முதியவரால் உருவாக்கப்பட்ட அதிசய வானவில் கிராமம்

village-vanavil 2022 01 06

 

ரெயின்போ வில்லேஜ் அல்லது வானவில் கிராமம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா.. தற்போது உலகம் முழுவதையும் கவர்ந்துள்ள அந்த கிராமம் ஒரு முதியவரால் உலகத்தின் கவனத்தை பெற்றது என்றால் ஆச்சரியம் தானே.. அவர் பெயர் Huang Yung-fu, அந்த கிராமம் Taichung அமைந்துள்ள இடம் தைவான். 2 ஆம் உலகப் போர் கால கட்டத்தில் சீனாவிலிருந்து பிரிந்து வந்த சிலருக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்புகள் அமைந்த இடம் தான் Taichung. அண்மையில் இதை இடித்து விட்டு மால் கட்ட அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து 97 வயதான Huang Yung-fu மட்டும் வெளியேற மறுத்து விட்டார். அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் வலிமையை இழந்து விட்ட முதியவர் Huang Yung-fu தன் கையில் எடுத்தது தூரிகையை. அந்த கிராமத்தின் அனைத்து சுவர்களை மூலை முடுக்குகளையும்,இண்டு இடுக்குகளையும் தனது கலை திறமையால் அற்புதமான ஓவிய கூடமாக மாற்றினார். பார்ப்பவர்களை கவரும் வானவில் கிராமமாக மிளிர்ந்தது. இதை கேள்விபட்ட பொது மக்கள் அங்கு வந்து இவற்றை படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரும் பிரபல சுற்றுலா தளம் என்ற பட்டியலில் அந்த கிராமம் இடம் பெற்றது. இதையடுத்து அதை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு அரசே இப்போது தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறது. தூரிகையின் வலிமையை இந்த உலகுக்கு புரிய வைத்தவர் Huang Yung-fu.

இதை ஷேர் செய்திடுங்கள்: