முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யும் நவீன மின்சார கார்

Image Unavailable

-கார்பன் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் மாசு தாக்கத்தால் பருவ நிலை மாறுபாடு என ஏகப்பட்ட பிரச்னைகளை இன்றைய பூமி சந்தித்து வருகிறது. இதை மாற்றுவதற்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் வாகனத்திலிருந்து மின் வாகனத்தை நோக்கி மாறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்தாண்டு டீசல் வாகனங்களின் விற்பனையை மின் வாகனங்களின் விற்பனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யக் கூடிய காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போதைய கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை மட்டுமே ஓட்டி செல்லலாம். இந்த சூழலில் தான் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ செல்லும் வரையிலான கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. VISION EQXX என்ற மாடலில் இதை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார் மற்ற கார்களை விட எடை குறைந்த காராகும். மேலும் இதன் கூரை சோலார் பேனலால் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25 கிமீ வரை செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.

காருக்குள் கண்ணாடி திரையில் ஹோலோ கிராம் இமேஜிங், ஜிபிஎஸ் டிராக்கிங் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. மேலும் வேகத்துக்கும் குறைவிருக்காது என சொல்லப்படுகிறது. இனி புதிய எதிர்காலத்துக்கான நவீன வாகனமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம்.

 

-

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்