முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தீக்குச்சிகள் எப்போது பயன்பாட்டுக்கு வந்தன

Image Unavailable

பழங்கால மனிதன் தீயைக் கண்டுபிடித்தபோதே முதல் தீக்குச்சி வடிவமைக்கப்பட்டதாகக் கருதலாம். தற்காலத் தீக்குச்சிகள், குறைவான வெப்ப நிலையிலேயே தீப்பிடித்துக்கொள்ளும் பாஸ்ஃபரஸ் (phosphorus) கண்டறியப்பட்ட பின்னர் உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்திப் பல்வகை வடிவிலான தீக்குச்சிகள் வடிவமைக்கப்பட்டன.

முதலாவது பாதுகாப்பான தீக்குச்சிப் பெட்டிகள் (safety matches) 1844ஆம் ஆண்டு ஸ்வீடனில், நச்சுத் தன்மையற்ற சிகப்புப் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டன. தீப்பிடித்து எரிவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களையும் தீக்குச்சியின் தலைப் பகுதியில் சேர்க்காமல், சிகப்புப் பாஸ்ஃபரஸை பக்கவாட்டுச் சுவர்ப் பகுதியில் பூசி, தீக்குச்சியை அதில் உராயச் செய்து தீயை உண்டாக்கும் வகையில் தீப்பெட்டி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்