முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இலங்கை தூதரகம் முன் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 3 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு வரும் 5​ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago