முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் கற்கள் கொள்ளை: அழகிரி மகன் மீது வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை,ஆக.7 - அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்து திருடியதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதி  மற்றும் நாகராஜ் ஆகியோர் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கடந்த திமுக ஆட்சியின் போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழுவினர் மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் கடந்த 5 தினங்களாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதற்கிடையில் மேலூர் தாலுகா கீழவளவு கிராமம் அம்மன்கோவில்பட்டி சர்க்கரை பீர்மலை அருகே  ஒலம்பஸ் கிரானைட் என்ற பெயரில் மதுரையை சேர்ந்த நாகராஜ் மற்றும் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் தயாநிதி ஆகியோர்  கிரானைட் குவாரி நடத்தி வந்தனர். அரசு புறம்போக்கு நிலத்திலும் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து பலவண்ண கிரானைட் கற்களை திருடி சென்றதாக நேற்றைய ஆய்வின் போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

   இது குறித்து கீழவளவு கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நாகராஜ் மற்றும் மு.க.அழகிரி மகன் தயாநிதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்திய குற்றவியல் சட்டம் 447, 379 மற்றும் 3(1) தமிழ்நாடு மைன்ஸ் மற்றும் மினரல் டெவலப்மென்ட் சட்டம் 4(1), 4(2), (ஏ), 4(3) மற்றும் 21 (பி)(5) ஆகிய சட்ட விதிகளின்படி போலீசார் ஒலிம்பஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து  மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தவிர மேலும் 6 தனியார் கிரானைட் நிறுவனங்கள் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்