முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை பணகுடி அருகே விபத்தில் இருவர் பலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

நெல்லை,ஆக.9 - நெல்லை பணகுடி அருகே நேற்று லாரி மீது வேன் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் இதில் டிரைவர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து நேற்று அதிகாலை பிஸ்கட் ஏற்றிய வேன் நாகர்கோவிலுக்கு சென்றது. வேனை திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் பிஸ்கட் இறக்கும் தொழிலாளர்களான திண்டுக்கல்லை சேர்ந்த சிவராஜன் (50), முத்துக்குமார் (19) ஆகியோர் வேனில் முன்பக்கம் உட்கார்ந்திருந்தன்ா. வேன் நேற்று அதிகாலை நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் டிரைவர் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் வேனின் முன்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சிவராஜன், முத்துக்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். டிரைவர் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்