எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம், ஆக.- 15 - திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு கீழாக நங்காச்சி ஆறு எனப் பெயர் பெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டனைக்கட்டு வரை சென்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருகிறது. இந்துக்களின் புனித தலமாக வடக்கே காசியின் தெய்வீகத்தையும் மகத்துவமும் இருப்பதால் பக்தர்கள் இதை ''நல்காசி ஆறு'' என்றே இன்னமும் அழைக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பல கோவில்களுக்கு இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் சென்று தங்கள் குலதெய்வம் உள்ளிட்ட இதர தெய்வங்களுக்கும் தீர்த்தாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். நல்காசி ஆறு எனப்படும் நங்காஞ்சியாறு காவேரி நதியின் கிளை நதியான அமராவதி ஆற்றின் உபநதியாகும். பரப்பலாற்றின் குறுக்கே தலையூத்துக்கு மேலே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் மலைப்பாதையில் அமைந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றினால் பயன்பெற்று வந்த 1373 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உறுதியான பாசன நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கூடுதலாக 1000 ஏக்கர் பாசன நிலங்களை கூடுதல் பயன் பெறுவதற்கும் பரப்பலாறு நீர்த்தேக்கத் திட்டம் 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.10.40 லட்சம் மதிப்பிலான தொகை செலவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது.
பரப்பலாறு நீர்த்தேக்கம் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது அணையின் சிறப்பு அம்சமாகும். அணையின் மொத்த நீளம் 81.08 மீட்டர் ஆகும். ஆற்றின் ஒரு மடையின் அளவு அதாவது ஒரு கண் அளவு 1.52 மீட்டர் ஞ் 1.83 மீட்டர் அளவில் உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றப்படும் அணைப்பகுதியில் 3 கண்கள் 9.75 மீட்டர் ஞ் 4.57 மீட்டர் என்கிற அளவுகளில் வளைவு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று மடையின் அடித்தளம் மட்டம் 527.305 மீட்டர். அணையின் நிறை நீர் மட்டம் 554.780 மீட்டர். உச்சநீர் மட்டம் 555.65 மீட்டராகும். அணையின் கரை மேல் மட்டம் 557.780 மீட்டராகும். அணைக்கட்டின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டராகும். இந்த அணையின் நீர் வழிந்தோடி உலகின் பிரபலமான அணைக்கட்டுகள் அமைந்துள்ள பிலிப் பக்கெட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது அணைக்கு கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.
பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மி.கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய நீர் வரத்து கிடைக்கப் பெறும் அணையின் வண்டல் மண்படிந்து நீரின் கொள்ளளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் நீரியல் ஆய்வகம் 2002ம் ஆண்டில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அணையின் கொள்ளளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. 2002ல் நீரியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் 197.95 மி.கன அடி உள்ள பரப்பலாறு அணையின் நீர் மட்டம் 4.021852 மி.க. மீட்டர் குறைந்துள்ளதாகரும் 1.58409 மி.கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது எனவும் அறக்கை சமர்பிக்கப்பட்டது. நீரியல் ஆய்வக அறிக்கை எண் 1/2003 மதிப்பிட்டுள்ள 1584090 கன மீட்டர் வண்டல் மண்ணை அப்புறப்படுத்த 12.55 லட்சம் தொகைக்கான மதிப்பீடு தயாரித்து திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பரப்பலாறு அணையின் மூலமாக 1504 டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணைக்கட்டின் நீர் ஆதாரத்தின் மூலமாக ஒரு டன் உணவு உற்பத்திக்கு ரூ.6300 மட்டுமே செலவாகும் என விவசாயத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு ஏக்கருக்கு மொத்த செலவு ரூ.4480 மட்டுமே எனவும் விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரப்பலாறு அணைக்கட்டின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக திண்டுக்கல், கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள்குளம் அணைக்கட்டு, சடையகுளம் அணைக்கட்டு, ராமசமுத்திரம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி பெரியகுளம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி அணைக்கட்டு, வரதாகன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1278 ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பயனடைந்து வருகிறது. பரப்பலாறு அணையின் மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கோறையூத்து அணைக்கட்டு ஒட்டனை அணைக்கட்டு, அரவக்குறிச்சி அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1323 ஏக்கர் நிலம் பாசனப்பயன்பாடு பெற்று வருகிறது. தற்சமயம் உலக வங்கியின் நிதி ஆதாரம் மூலமாக பரப்பலாறு அணை மராமத்து செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிலத்தடி நீரை சேமிக்க கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியதால் இன்றைக்கு குடிநீர் ஆதாரம் வெகுவாக காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீர்வளத்தை காப்பதற்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை வகுத்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலமாக குளங்கள் முதல் அணைக்கட்டுகள் வரை மராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே நீர்வள ஆதாரம் பெருக அணைக்கட்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் தமிழக முதல்வரை விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்வேறு சிறப்புத்தகுதி படைத்த பரப்பலாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
எவ்வித கட்டணமுமின்றி கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
03 Feb 2026சென்னை, வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும
-
அமெரிக்காவின் வரிக்குறைப்பு எதிரொலி: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்: மத்திய நிதியமைச்சர்
03 Feb 2026டெல்லி, அமெரிக்காவின் வரிக்குறைப்பு காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரிக்குறை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –03-02-2026
03 Feb 2026 -
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் அதிகரிப்பு
03 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விறபனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர்
03 Feb 2026புதுடெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும் என்று தெரிவித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட
-
39 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
03 Feb 2026புதுடெல்லி, பல்வேறு தேர்தல் வெற்றிகளால் திருப்தி அடைந்து விடக்கூடாது என்ற தே.ஜ.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: வருகிற 6-ம் தேதி முதல் த.வெ.க. சார்பில் விருப்பமனு விநியோகம்
03 Feb 2026சென்னை, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சியின் தோழர்கள் வரும் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) முத
-
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார் கொலம்பியாவின் அதிபர் அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை
03 Feb 2026நியூயார்க், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச
-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்
03 Feb 2026நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.
-
மகளிர் உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாகியுள்ளது: அமைச்சர்
03 Feb 2026சேலம், கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ.
-
45 பவுன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பாராட்டி தங்கச்சங்கிலி பரிசளித்தார் ரஜினி
03 Feb 2026சென்னை, தான் கண்டெடுதத் 45 பவுன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி அவரை நேரில் வரவழைத்து தங்கச்சங்கிலியை நடிகர் ரஜினிகாந்த் பரிசளித்த
-
234 சட்டசபை தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா..? அண்ணாமலை கேள்வி
03 Feb 2026சென்னை, விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை.
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி
03 Feb 2026திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
விரைவில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு
03 Feb 2026சென்னை, முதுகலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
சர்வதேச நிச்சயமற்ற சூழ்நிலையால் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம்? மத்திய நிதி அமைச்சர் விளக்கம்
03 Feb 2026புதுடெல்லி, தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது
03 Feb 2026ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
நாட்டை விற்றுவிட்டார்: பிரதமர் மீது ராகுல் விமர்சனம்
03 Feb 2026புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
-
தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகினார் அண்ணாமலை..!
03 Feb 2026கோவை, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்
03 Feb 2026தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
-
ரஷ்யாவில் ஒரு அரிய நிகழ்வு: வானில் தோன்றிய 4 நிலவுகள்:
03 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு


