தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்: ஹர்பஜன்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 22 - தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன் என்று இந்தியாவின் மூத்த சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கிறார். கவுன்டி போட்டியில் எஸ்செக்ஸ் அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங் 5 விக்கெட் வீழ்த்தி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 

இதனைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறார். கடந் த ஒரு வருட காலமாக அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. 

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்திற்கு எதிரான தொடர் மற்றும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நட க்க இருக்கும் டி - 20 உலகக் கோப்பை அணி ஆகியவற்றிற்கு தேர்வு செய்யப் பட்டு இருக்கிறார். 

எஸ்செக்ஸ் அணிக்காக அவர் 5 விக்கெ ட் வீழ்த்தியது அவருக்கு மகிழ்ச்சியை காட்டிலும், நிம்மதி பெரு மூச்சு விடச் செய்துள்ளது. 

இங்கிலாந்து தொடருக்குப் பின்பு இந் தியாவின் முன்னணி ஆப் ஸ்பின்னரா  ன ஹர்பஜனின் பந்து வீச்சு எடுபடவில் லை. எனவே அவருக்குப் பதிலாக அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோருக் கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இருந்த போதிலும், ஹர்பஜன் சிங் இந் தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தி யன்ஸ் அணிக்காக தலைமை தாங்கி சிறப்பாக ஆடி வந்தார். அதில் நன்கும் பந்து வீசினார். 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனி ல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர்களது கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். 

மேலும், இந்திய அணிக்காக நான் தே ர்வு செய்யப்பட்டது எனக்கு ஊக்க டா னிக்காக இருந்ததா என்று தெரியவில் லை. நான் எஸ்செக்ஸ் அணிக்காக கடந்த ஒரு வார காலமாக சிறப்பாக பந்து வீசி வருகிறேன். எனது தலையில் இருந்து சுமை இறக்கப்பட்டது போன்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு வார காலமாக பருவச் சூழ் நிலை சிறப்பாக இருந்தது. அது எனது பந்து வீச்சிற்கு உதவியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். 

கவுன்டி போட்டியில் கடந்த 2 ஆட்டங் களில் ஹர்பஜன் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை எஸ்செக்ஸ் அணிக்காக அவர் ஆடினார். 

நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 37 ரன்னைக் கொடு த்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, 13 பந் தில் 22 ரன்னையும் எடுத்தார்.  

தவிர, நான் ஒரு தொழில் ரீதியான ஆட்டக்காரன். எனவே எஸ்செக்ஸ் அணிக்காக விளையாடுவது எனது கடமையாகும். அந்த அணி ஒரு சிறந்த அணியாகும். எனது மறுவரவிற்கு உத விய அந்த அணி நிர்வாகிகளுக்கு நான் மிக்க நன்றியை தெரிவிக்கிறேன் என்று ம் அவர் கூறினார். 

டர்பனேட்டர் என்ற பெயரால் அழைக் கப்படும் ஹர்பஜன் சிங் இதுவரை 98 டெஸ்ட் போட்டி மற்றும் 229 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: