முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் டெஸ்டில் 12 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது - அஸ்வின் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஆக. - 28 - நியூசிலாந்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்டில் 12 விக்கெட் வீழ்த்தியது மகிழ் ச்சி அளிக்கிறது என்றும், இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று  முன்ன ணி சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் தெரிவித்தார்.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது கிரி க்கெட் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தி ல் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மை தானத்தில் நடைபெற்றது.  இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந் து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இறுதியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 115 ரன் வித்தியாசத்தில் வெ ற் றி பெற்றது.  இந்திய அணி இந்தப் போட்டியில் முத லில் பேட்டிங் செய்து சிறப்பாக ஆடி 438  ரன் குவித்தது. நியூசி. அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பா லோ ஆன் ஆனது.  தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசி. அணி 164 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங் ஸ் வெற்றி பெற்றது. நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 4-வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 

முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி ய தமிழக வீரர் அஸ்வின் 2-வது இன்னி ங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளி ப்படுத்தினார். அவர் 54 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.  ஓஜாவுக்கு 3 விக்கெட் கிடைத்தது. நியூசிலாந்து தரப்பில், வில்லியம்சன் அதிக பட்சமாக, 54 ரன் எடுத்தார். அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 12 விக்கெட் கைப்பற்றினார்.  இதன் மூலம் நியூசிலாந்திற்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய இந்திய பெளலர் என்ற சாதனையை பெற்றார். இதற்கு முன்பு நியூசிலாந்திற்கு எதிராக 1965 -ம் ஆண்டு எஸ் . வெங்கட்ராகவன் 152 ரன் கொடுத்து 12 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.  ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வி ன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது - எனது பந்து வீச்சு இவ்வ ளவு சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  12 விக்கெட் கைப்பற்றியது உண்மையி லேயே மகிழ்ச்சி தருகிறது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சில சமயம் வெ ற்றி பெறுவோம். சில சமயங்களில் தோல்வி அடைவோம். 

இதனால் கடந்த காலங்களில் நாங்கள் அடைந்த மோசமான தோல்வியை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை.  தற்போது உள்ளூரில் நடைபெறும் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளோம். ஐதராபாத்தில் பெற்ற இந்த வெ ற்றி எங்களது தொடக்கம் தான். 

இந்திய அணியின் வெற்றி நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பாக பந்து வீசி இருப்பதால் எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. பந்து வீச்சாளர் களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் சிறப் பாக இருந்தது. இவ்வாறு அவர்  கூறி னார். 

இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூரில் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்