முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அதிபர் ஜர்தாரியுடன் ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க்,செப்.- 26 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும் நேற்று நியூயார்க் நகரில் சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாதம், அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி நியூயார்க் நகருக்கு சென்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜர்தாரியும் ஹில்லாரி கிளிண்டனும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு அதிகரித்து வருவது, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடவடிக்கைகள், முஸ்லீம்களுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து பாகிஸ்தான் மற்றும் முஸ்லீம்கள் நாடுகளில் போராட்டம் நடந்து வருவது குறித்து அவர்கள் இருவரும் விரிவான முறையில் விவாதித்தனர் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபடுபவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஹில்லாரி எச்சரித்ததாக தெரிகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இதுதொடர்பாக இருநாட்டு உயரதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் ஹில்லாரியிடம் ஜர்தாரி எடுத்துரைத்தார். தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்பட வேண்டும் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் நாசவேலைகள் அதிகரித்து போகிறது. இதை ஒடுக்க வேண்டும் என்றும் ஹில்லாரி கூறியதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago