முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-அமெரிக்க எரிசக்திதுறை அதிகாரிகள் வாஷிங்டன்னில் சந்திப்பு

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 27 - இந்தியா-அமெரிக்கா இடையே எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு அதிகரிப்பது தொடர்பாக இருநாட்டு எரிசக்தி உயர்மட்ட அதிகாரிகள் வாஷிங்டன்னில் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர்.  இன்றும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.  இந்தியாவின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிப்பதற்கு தகுந்தவாறு உற்பத்தி குறைவாக இருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும் செலவு அதிகமாகிறது. செலவு குறைவில் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு சுயநலம் உள்ளவர்கள் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகிறார்கள். அதேசமயத்தில் எரிசக்திதுறையில் அமெரிக்கா சிறந்து விளங்குகிறது. அதனால் எரிசக்தி துறையில் இருநாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதன் ஒரு நடவடிக்கையாக அமெரிக்க நாட்டு உயரதிகாரிகளும் இந்திய உயரதிகாரிகளும நேற்றுமுன்தினம் வாஷிங்டன்னில் பேச்சுவார்த்தையை தொடங்கினர். பேச்சுவார்த்தையின்போது எரிசக்தி உற்பத்தியை பெருக்குவதற்கான ஆதாரங்களை திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுவும் இந்த ஆதாரங்கள் மாசு ஏற்படாதவாறும் தூய்மையை காக்குமாறும் இருக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய உயரதிகாரிகள் குழுவுக்கு திட்டக்கமிஷன் உறுப்பினர் பி.கே. சதுர்வேதியும் அமெரிக்க உயரதிகாரிகள் குழுவுக்கு அந்த நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் ஸ்டீவன் சுவும் தலைமை தாங்கினர்.  வாஷிங்டன்,செப்.- 27 - இந்தியா-அமெரிக்கா இடையே எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு அதிகரிப்பது தொடர்பாக இருநாட்டு எரிசக்தி உயர்மட்ட அதிகாரிகள் வாஷிங்டன்னில் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர்.  இன்றும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.  இந்தியாவின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிப்பதற்கு தகுந்தவாறு உற்பத்தி குறைவாக இருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும் செலவு அதிகமாகிறது. செலவு குறைவில் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு சுயநலம் உள்ளவர்கள் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகிறார்கள். அதேசமயத்தில் எரிசக்திதுறையில் அமெரிக்கா சிறந்து விளங்குகிறது. அதனால் எரிசக்தி துறையில் இருநாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதன் ஒரு நடவடிக்கையாக அமெரிக்க நாட்டு உயரதிகாரிகளும் இந்திய உயரதிகாரிகளும நேற்றுமுன்தினம் வாஷிங்டன்னில் பேச்சுவார்த்தையை தொடங்கினர். பேச்சுவார்த்தையின்போது எரிசக்தி உற்பத்தியை பெருக்குவதற்கான ஆதாரங்களை திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுவும் இந்த ஆதாரங்கள் மாசு ஏற்படாதவாறும் தூய்மையை காக்குமாறும் இருக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய உயரதிகாரிகள் குழுவுக்கு திட்டக்கமிஷன் உறுப்பினர் பி.கே. சதுர்வேதியும் அமெரிக்க உயரதிகாரிகள் குழுவுக்கு அந்த நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் ஸ்டீவன் சுவும் தலைமை தாங்கினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்