முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கப்படும்- ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம்,ஏப்.- 11 - தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கடந்த 5 ஆண்டு தி.மு.க ஆட்சியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து சேலத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வழியெங்கும் கூடி நின்று எனக்கு உற்சாகத்துடன் வரவேற்பளிக்கின்றனர். அவர்கள் தமிழகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் தமிழகம் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஜவுளித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நசிவடைந்துள்ளன. ஏராளமானோர் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர். 

நான் முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால பின்னடைவை சரி செய்வது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். தி.மு.க. அரசின் ஒவ்வொரு நலத்திட்டமும் ஒரு குடும்பத்துக்காக ஏற்படுத்தப்பட்டதே தவிர மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படவில்லை. கடந்த 2001 ல் அ.தி.மு.க பதவியேற்றதும் ஒரே நாள் இரவில் ரவுடிகள் மாநிலத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். அதே போல் இப்போது அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதே எனது முதல் பணியாக இருக்கும். 

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி நண்பனாக இருக்குமா, எதிரியாக இருக்குமா என்பது குறித்து இப்போது ஏதும் கூற முடியாது. எனது கவனம் அனைத்தும் இப்போது தி.மு.க.வை வீழ்த்துவதில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் 2011 ல் அமையவுள்ள அ.தி.மு.க. அரசு மக்கள் எதிர்பார்க்கும் அரசாக இருக்கும். இப்போதைய தி.மு.க ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பேன். தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாற்றும் ஏதும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அ.தி.மு.க தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். 

மத்தியில் இப்போது உள்ள காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாகவே உள்ளது. எந்த ஒரு பிரச்சினைக்கும் உறுதியான தீர்வு காண முடியாத தலையாட்டி பொம்மையை போன்று பிரதமர் செயல்படுகிறார். எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட்டு மக்களின் நலன் விரும்பும் புதிய அரசு அமைய வேண்டும். மத்தியில் 3 வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து இப்போது கூற முடியாது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உறுதியான பிரதமர் வந்தால் மட்டுமே இது நடைபெறும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago