முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் ஊழல் எங்கும் நடைபெறாத ஊழல் - ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.12 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பியபோது போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்பாக  அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதாவிடம் கேட்ட கேள்விகளுக்கு,  அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: தமிழகம் முழுவதும் கடந்த 19 நாட்களாக பிரச்சாரம் செய்தீர்கள், மக்களிடம் உங்களுக்கு எப்படி வரவேற்பு இருந்தது?

பதில்: இதற்கு நான் பலமுறை பதில் சொல்லிவிட்டேன். எங்களுக்கு ஆதரவு ரொம்ப அதிகமாக உள்ளது. இன்று பிரச்சாரம் செய்துவிட்டு, திரும்பியபோது எங்களுக்கு நம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. தமிழ்நாடு புதிய யுகத்தின் வாயிலில் உள்ளது. 

கேள்வி: எஸ்டன் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.விக்கு 52 கோடி ரூபாய் கைமாறிவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதுபற்றி தங்களது கருத்து என்ன?

பதில்: இதுபற்றி முழுமையாக நான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுபற்றி முழுமையாக தெரிந்த பிறகு பதில் சொல்கிறேன். கருணாநிதியின் குடும்பத்தாரும், அமைச்சர்களும் இதுவரை யாரும் பார்த்திராத ஊழல் செய்துள்ளார்கள். உலகத்தில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இதுபோன்ற மெகா ஊழல் இதுவரை எங்கேயும் நடந்திருக்காது. தவறு செய்பவர்களை மக்கள் தண்டிக்க நினைக்கிறார்கள். அரசு நிர்வாகம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். 

கேள்வி: தேர்தல் ஆணையம் சில தொகுதிகளில் தேர்தலை நிறுத்தப்போவதாக கூறுகிறார்கள்?

பதில்: தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு காரணம் இருக்கும். 

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு வந்த ஜெயலலிதாவை அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வேளாங்கன்னி ஆரத்தி எடுத்து, திருஷ்டி பூசணிக்காய் உடைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago