முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தல்: ஒபாமாவுக்கு முஸ்லீம்கள் ஆதரவு

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அக்.26 - அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த நாட்டு முஸ்லீம்களில் பெரும்பாலானோர் தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமாவும் குடியரசு கட்சி சார்பாக மிட் ரோமனியும் போட்டியிடுகின்றனர். இவர்கள் கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு ஆதரவு கோரி தீவிர பிரசாரம் செய்தனர். இருவரும் ஒரே மேடையில் விவாதம் செய்தனர். முதல் விவாதத்தில் ஒபாமாவைவிட ரோமனி மிஞ்சினார். இந்தநிலையில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற முஸ்லீம்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் தற்போதைய அதிபர் ஒபாமாவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் உள்ள முஸ்லீம்களில் 68 சதவீதம் பேர் அதிபர் ஒபாமா மீண்டும் அதிபராக ஓட்டளிப்போம் என்று கூறியுள்ளனர். 7 சதவீத முஸ்லீம் மக்களே ரோமனிக்கு ஓட்டளிப்போம் என்று கூறியுள்ளனர் என்று கருத்து கணிப்பு நடத்திய அமெரிக்க-இஸ்லாமிய உறவுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த மாதம் முதல் இரண்டு வாரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட முஸ்லீம்களிடையே கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயத்தில் 25 சதவீத முஸ்லீம்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago