முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்ராம் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு தங்கப்பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - அண்ணா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடங்களை பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேரை,  இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது நீதிபதி ஜோதிமணி பாராட்டினார்.

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இதில் சென்னை உயர்nullநீதிமன்ற nullநீதிபதி பி.ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் லியோ முத்து இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்  சி.வி. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். இயக்குநர்

வி.ஆர். இராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். செயலாளர் எம்.வாசு வாழ்த்துரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி  சாய் பிரகாஷ் லியோ முத்து நன்றியுரை ஆற்றினார்.

2009 -​10 ஆவது கல்வி ஆண்டில்,  ஜி. சங்கரலக்ஷ்மி (ஐ.சி.இ.), ஜி. ராகவன்(மெக்கானிக்கல்),  எச். ராஜ்குமார்(எம்.பி.ஏ.), எ. பிரேமலதா(எம்.இ.) ஆகிய 4 பேர் அண்ணா

பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களைத் தட்டிச்

சென்றனர். தமிழகத்திலேயே அதிக தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே என்ஜினீயரிங்

கல்லூரி என்ற பெருமையையும் இதன் மூலம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரி தட்டிச் சென்றது.

தங்கப் பதக்கங்கள் வென்ற நான்கு மாணவர்கள் உள்பட 43 மாணவர்கள் பல்கலைக்கழக

ரேங்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் தங்க

நாணயங்களும், பதக்கங்களும் வழங்கி கல்லூரி நிர்வாகம் கெளரவித்தது. இவ்விருதுகளை நீதிபதி ஜோதிமணி  சாதனை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.

இதுதவிர, சென்ற கல்வியாண்டில், இளநிலைப் பிரிவில் 449 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 134 மாணவர்களும் மொத்தம் 583 மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதினர்.

இதில் இளநிலைப் பிரிவில் 424 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 132 மாணவர்களும்

மொத்தம் 556 மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டங்களைப்

பெற்றனர்.

நடப்புக் கல்வியாண்டில் (2010​-11) இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், டி.சி.எஸ்.,

எச்.சி.எல்., ஐனாடிக், டெக்மகேந்திரா, ஐஃபிளெக்ஸ், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ்,

பிரேக் இந்தியா, குளோபல் அனலிட்டிக், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டைட்டன்,

சைபெம் இந்தியா, ஃபோர்ட், செயின்ட் கோபைன், நாகார்ஜூனா கன்ட்ரக்ஷன்,

எச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட 52 நிறுவனங்களில் பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக (2009-10, 2010-11) வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்த

இறுதியாண்டு மாணவர்களில் 95 சதவீத மாணவர்கள், வளாக நேர்காணலில் தொடர்ந்து

வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், ஆய்வுப் பணிக்காக

ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு இக்கல்லூரிக்கு மொத்தம் ரூ. 1 கோடியை உதவித் தொகையாகவும்

வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago