ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 18 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், அசரென்கா மற் றும் டிஜோங்கா ஆகியோர் 2- வது சுற் றில் வெற்றி பெற்று 3 -வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முக்கிய நகரமான மெ ல்போர்னில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்ற களத்தில் குதித்து உள்ளனர். இந்த ப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீரா ங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப் பில் ஆழ்ந்துள்ளனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்சும்,ஸ்பெயி ன் வீராங்கனையும் மோதினர். 

இதில் 3 -ம் நிலை வீராங்கனையான         செரீனா சிறப்பாக ஆடி 6 - 2, 6 - 0 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரா ங்கனை கார்பனை வீழ்த்தி 3-வது சுற் றுக்குள் நுழைந்தார். 

மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றி ல் பெலாரஸ் வீராங்கனை விக்டோரி யா அசரென்காவும், கிரீஸ் வீராங்க னையும் மோதினர். 

இதில் உலக நம்பர் - 1 வீராங்கனையான அசரென்கா அபாரமாக ஆடி, 6-1, 6 -0 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை எலினாவை வென்று அடு த்த சுற்றுக்கு முன்னேறினார். 

இதே போல 14 -ம் நிலை வீராங்கனை கிரிலென்கோ, குஜ்னெட்சோவா, எலீ னா வெஸ்னினா, (மூவரும் ரஷ்யா), ஜப்பான் வீராங்கனை மொரிட்டா, இத்தாலி வீராங்கனை வின்சி ஆகி யோரும் 3 -வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2- வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் பிரான்ஸ் வீரர் டிஜோங்காவும், ஜப்பான் வீரரும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் சிறப் பாக ஆடி, 6 -3, 7 -6(7), 6 - 3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் சொய்டாவை வீழ்த்தினார். 

மற்ற ஆட்டங்களில் லிதுனியா வீரர் ரிச் சர்டு, ஜெர்மனி வீரர் பிலிப், கனடா வீரர் ரோஸ்னிக் ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: