ரபேல் நடால் சிலி போட்டியில் மீண்டும் களம் இறங்குகிறார்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மேட்ரிட், பிப். 1 - ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீர ரான ரபேல் நடால் சிலி நாட்டில் இந்த வாரம் நடக்க இருக்கும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார். இருந்த போதிலும் தனது முழங்கால் காயம் இடைஇடையே சிரமத்தை அளி த்து வருவதாகவும் நடால் ஒப்புக் கொ  ண்டு இருக்கிறார். 

ஸ்பெயின் அணியின் முன்னணி வீரரா  ன ரபேல் நடால் கடந்த 7 மாத கால மாக முழங்கால் காயம் காரணமாக டென்னிஸ் போட்டிகளில் ஆடவில்லை.

கடந்த மாதம் நடந்த இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்ட அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. 

உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரபேல் நடால் இதுவரை 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாத னை புரிந்து இருக்கிறார். அவர் கடை சியாக கடந்த வருடம் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார். 

கடந்த ஜூன் மாதம் விம்பிள்டனில் பங்கேற்ற நடால் 2-வது சுற்றில் செக். வீரர் லூகாஸ் ரசோலிடம் தோற்றார். அதன் பிறகு, அவர் சர்வதேச போட்டி களில் ஆடவில்லை. 

சிலி நாட்டில் ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்று வினா டெல் மார் நகரில் இந்த வாரம் துவங்க இருக்கிற து. இதில் ஒயில்டு கார்டு மூலம் அவர் பங்கேற்கிறார். 

26 வயதான ரபேல் தனது சொந்த ஊரா   ன மல்லோர்காவில் பயிற்சி எடுத்த பின்பு நிருபர்களைச் சந்தித்தார். அப்போது மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் ஆட ஆர்வமாக இருப்பதாகவு ம், ஆனால் தனது முழங்கால் காயம் எப்படி ஒத்துழைக்கும் என்று தெரியவி ல்லை என்றார் அவர். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சர்வ தேச போட்டிகளில் விரைவில் பங்கே ற்பேன் என்றார் அவர். 

தற்போது தொழில் ரீதியிலான போட்டியில் ஆடும் அவளவிற்கு எனது முழங் கால் ஏதுவாக உள்ளது. இருந்த போதி லும், இது தொடர்ந்து ஆட உதவுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். 

காயம் காரணமாக 7 மாத காலமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தேன். தற்போது பயிற்சி எடுத்து வருகிறேன். சிலி போட்டியில் முக்கிய வீரர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடுவே ன் என்றும் நடால் கூறினார். 

இந்தப் போட்டியில் 5 -ம் நிலை வீரரா  ன நடால் தவிர அர்ஜென்டினா வீரரும், நடப்பு சாம்பியனுமான  ஜூ வான் மொனாக்கோவும் கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: