ஐ.பி.எல்.-6 போட்டிக்கான ஏலம்: தெ.ஆ. வீரர் மோரிஸ் வியப்பு

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 6 -  என் வாழ்க்கையில் இவ்வளவு பணத் தைப் பார்த்தது கிடையாது என்று ஐ. பி.எல். - 6 போட்டிக்கான ஏலத்தின் போது தெ. ஆ. வீரர் கிறிஸ் மோரிஸ் தெரிவித்தார்.  இந்தியன் பிரீமியர் லீக்கின் 6 - வது ஆண்டு போட்டி வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. கடந்த 5 ஆண்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்தன. 

ஐ.பி.எல். - 6 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 106 வீரர்கள் ஏலத்தில் இடம் பெற்று உள்ளனர். 

இந்த ஏலத்தின் போது, சென்னை சூப் பர் கிங்ஸ் அணி தெ.ஆ. ஆல்ரவுண்டர் மோரிசை ரூ.3.3 கோடிக்கு (6,25,000 அமெரிக்க டாலர்கள்) எடுத்துள்ளது. கிறிஸ் மோரிசின் அடிப்படை விலை 20,000 அமெரிக்க டாலர்களாகும். தற் போது எடுக்கப்பட்டுள்ள அவரது அடி ப்படையை விட 31 மடங்கு கூடுதலா கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முந்தைய ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோரிசை ஏலத்தில் எடுத்தன. தற்போது சென் னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்து உள்ளது. 

சென்னையில் நடைபெற்று வரும் ஐ. பி.எல். - 6 போட்டிக்கான ஏலத்தில் மொத்தம் 108 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். இதில் 37 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

இந்த ஏலம் குறித்து, இ.எஸ்.பி.என். கிரிக்கின்போ சார்பில் கேட்ட போது,  எனது வாழ்க்கையில் இவ்வளவு பணத் தைப் பார்த்தது கிடையாது என்று மோரிஸ் ஆச்சரியத்துடன் கூறினார். 

இந்த ஏலத்தின் போது, எனது விலை 4.50,000 டாலர்களுக்கு சென்ற போது சக வீரரான நெய்ல் மெக்கன்சி ஆச்சரி யமடைந்தார். என்ன நடக்கிறது என்ப தை எங்களால் உணர்ந்து கொள்ள முடி யவில்லை என்றும் மோரிஸ் தெரிவித் தார். 

25 வயதான தெ. ஆ. வீரரின் தற்போ தைய வருமானம் 5.5 மில்லியன்களா கும். இதை எப்படி செலவு செய்வது என்பது புரியாமல் அவர் திணறிவருகிறார். இது குறித்து தனது பெற்றோரிட ம் ஆலோசித்து வருகிறார். 

தெ.ஆ. வில் கடந்த சீசனில் தேசிய அளவிலான டி - 20 போட்டி நடந்தது. இதில் லயன்ஸ் அணி சார்பில் பங்கேற்ற கிறிஸ் மோரிஸ் அதிக விக்கெட்டுக ளை வீழ்த்தினார்.

மேலும், அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி - 20 யில் மோரிஸ் சிறப்பாக ஆடினார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், மோரிசை ஐ.பி.எல். லிற்கு சிபாரிசு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: