முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட நூல்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய உத்தரவு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 22 - தமிழ்வழி பாட நூல்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஈரோட்டை சேர்ந்த பொதுமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு தலைவர் சண்முகசுந்தரம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:​ அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை 1 முதல் 10​ம் வகுப்பு வரை அமல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிச்சந்தைகளில் ஆங்கில வழி பாட நூல்கள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் தமிழ் வழி பாட நூல்கள் கிடைப்பது இல்லை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் பாட நூல்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனோ வெளியில் கடைகளில் கிடைப்பது இல்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்ததால் பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்கள் பெரும்பாலானோர் தனியாக படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கான பாட நூல்கள் வெளியில் கிடைக்காததால் தவிக்கிறார்கள். தமிழ் வழி பாட நூல்களை வெளிச்சந்தையில் விற்பதை கட்டுப்படுத்தும்படி கல்வித் துறை அதிகாரிகள் வாய் மொழியாக உத்தரவிட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழ் வழிக்கல்விக்கான பாட நூல்கள் வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறைக்கு உத்தர விட வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த nullநீதிபதி ஜோதிமணி தமிழ் பாட நூல்கள் வெளிக்கடைகளில் தாராளமாக கிடைக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்