எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, பிப். 21 - பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிக் கெடு விதித்திருந்தது. இதையடுத்து இத்தனை காலம் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாமல் சுணக்கம் காட்டி வந்த மத்திய அரசு, தற்போது சுப்ரீம் கோர்ட்டின் கெடுவுக்கு பணிந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெடு முடிவதற்கு முதல் நாள் அதாவது நேற்று முன்தினமே கெஜட்டில்(அரசிதழில்) வெளியிட்டு விட்டது. எனவே இனிமேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு உத்தரவாதம் தமிழகத்திற்கு கிடைத்து விட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டு விட்டதால் தமிழக மக்களும், டெல்டா விவசாயிகளும், அ.தி.மு.க.வினரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறார்கள். இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளார். இப்போதுதான் தனக்கு மன நிறைவாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை அ.தி.மு.க. வினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 6 வருடங்களாகி விட்டன. ஆனால் இந்த தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில்(அரசிதழில்) வெளியிடாமலேயே இருந்து வந்தது. இதற்கு முன்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் கெஜட்டில் வெளியிடாமல் மத்திய அரசு சுணக்கம் காட்டியது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு கெஜட்டில் வெளியானது. இறுதித் தீர்ப்பை மத்திய அரசு வெளியிடாமலேயே இருந்து வந்தது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதங்கள் எழுதினார்.
இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி உட்பட வேறு எவரும் காவிரி விவகாரத்தில் இந்தளவிற்கு அக்கறை காட்டியதில்லை. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததும் இல்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா மட்டும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளிவர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்காததால் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 4 ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தாமதம் செய்வதா? என்று மன்மோகன்சிங் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது மத்திய அரசின் கடமை. தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அதை இன்னமும் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கர்நாடக அரசுதான் எதிர்க்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து கர்நாடகத்திற்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு கால அவகாசம் கோரியது. ஆனால் இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டனர். இதனால் மத்திய அரசு ஆடிப்போனது. ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு சுணக்கம் காட்டி வந்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்ததால் மத்திய அரசுக்கு வேறு வழி தெரியாமல் போனது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் ஷெட்டர், டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மன்றாடினார். கர்நாடகத்தை சேர்ந்த சித்தராமய்யா, அனந்தகுமார், ரேவண்ணா, பசவராஜ் போன்ற சர்வ கட்சித் தலைவர்களும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று வற்புறுத்தினார்களாம். ஆனால் மத்திய அரசு நேற்று முன்தினம் ஒரு முடிவுக்கு வந்தது. காரணம், சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நேற்று முன்தினமே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது. இவ்வாறு இறுதித் தீர்ப்பு வெளியாகி இருப்பது கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பின்னடைவாகும். தமிழகத்திற்கு இதன் மூலம் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனது 30 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் தான் செய்த மகத்தான சாதனையாக தான் இதை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றுதான் தனக்கு மனநிறைவு கிடைத்திருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நடுவர் மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி இருப்பதால் இனி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்க முடியாது. மறுக்கவும் வழியில்லை. அப்படிப்பட்ட ஒரு உத்தரவாதம் தமிழக அரசுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்துள்ளது.
இனி டெல்டா விவசாயிகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கு இந்த விஷயத்தில் நீதி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி விட்டதால் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்படும். அல்லது காலாவதியாகி விடும். புதிதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். எனவே இனிமேல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அதன்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எனவே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியானதால் தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், அ.தி.மு.க.வினர் என பலதரப்பட்ட மக்களும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு...
கர்நாடகத்தின் எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. எனவே இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூற முடியாது. தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் தந்தே தீர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சட்ட பாதுகாப்பு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007 ம் ஆண்டில் வெளியிட்டது. அதாவது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையின் நகல் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கும் அரசாணையின் நகலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. தண்ணீரும், கேரளாவிற்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் அளிக்கப்பட வேண்டும். இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டதால் நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். இந்த தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.
90 நாட்களுக்குள் அமலுக்கு வரும்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மறுக்க முடியாது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தற்போது தண்ணீர் கொடுத்து வந்த கர்நாடகம், பல சமயங்களில் அதையும் கூட கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தது.
ஆனால் இனி அப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலையிலேயே இந்த அறிவிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஒப்புதல் அளித்து விட்டார். பிரதமரின் அனுமதியை தொடர்ந்து அவர் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் அந்த அறிவிக்கையை நேற்று முன்தினம் மாலைக்கு மேல் அரசு வெளியிட்டது. இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நதிநீர் ஆணையம், கண்காணிப்பு குழு ஆகியவை ரத்தாகி விடும். அதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இனி, இவைதான் நதிநீர் பங்கீட்டை கண்காணித்து அமல்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
17-ம் தேதி கரூர் செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்
12 Oct 2025கரூர் : த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது
12 Oct 2025லக்னோ : இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
உபரிநீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.18 அடியை எட்டியது
12 Oct 2025மேட்டூர் : கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
-
பள்ளிகளில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறத
-
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
12 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், அவர்கள் இன்றைக்குள் க
-
இன்னும் ஒரு மாதத்திற்குள் டி.ஆர்.பி. மூலம் பேராசிரியர்கள் 2,200 பேர் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
12 Oct 2025சென்னை : ஒரு மாதத்திற்குள் டி.ஆர்.பி. மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
12 Oct 2025ஒகேனக்கல் : வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்
12 Oct 2025ராமேசுவரம் : இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் கைது
12 Oct 2025திண்டுக்கல் : த.வெ.க. திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் நிர்மல் குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
-
அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர்: ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு குடியரசு துணை தலைவர் புகழாரம்
12 Oct 2025புதுடெல்லி : பீகாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
-
22 குழந்தைகள் பலியான விவகாரம்: விதிமீறலில் ஈடுபட்ட மருந்து நிறுவனம்
12 Oct 2025புதுடெல்லி : காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் பல்வே
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி
12 Oct 2025பாட்னா : பீகாரில் அரசு வேலை இல்லா குடும்பங்களில், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். நவ.
-
மேற்குவங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை - மூவர் கைது
12 Oct 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைத
-
விஜய்யுடன் செல்போனில் பேசினேனா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
12 Oct 2025சேலம் : "த.வெ.க.வினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
-
100 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
12 Oct 2025பெய்ஜிங் : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100 சதவீதம் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல
-
காஷ்மீர் மாநிலங்களவை தேர்தல்: 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
12 Oct 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிட 3 வேட்பாளர்களை பா.ஜ.க.
-
முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா கருத்துக்கு காங். கடும் கண்டனம்
12 Oct 2025புதுடெல்லி : முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா வெளிப்படுத்திய கருத்துகளை விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘கடந்த 11 ஆண்டுகளாக அமித்ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?'
-
விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டும்: வடகலை, தென்கலை பிரிவினருக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரச்சனை செய்யாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்க
-
எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு
12 Oct 2025கெய்ரோ : பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு இன்று (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது.
-
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Oct 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்திலுள்ள ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு
12 Oct 2025காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.