முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.24 - தமிழகத்தில் பிளஸ் 2, 10-வது தேர்வு முடிவுகள் வரும் மே.14, மே.25-ந் தேதிகளில் வெளியாகும் என பள்ளி கல்விதுறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

 பிளஸ்​2 தேர்வு மார்ச் 2​ந்தேதி தொடங்கி 25​ந்தேதி முடிவடைந்தது. 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ​ மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். தனியாக 57 ஆயிரத்து 56 பேர் எழுதினார்கள். மொத்தம் 1,890 மையங்களில் பிளஸ்​2 தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28​ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11​ந்தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒ.எஸ்.எல்.சி. தேர்வை 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ​ மாணவிகள் எழுதினார்கள். தனியாக 97 ஆயிரத்து 655 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். பிளஸ்​2 விடைத்தாள் திருத்தும்பணி நடந்து முடிந்து விட்டது. மார்க் பட்டியல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வு தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. பிளஸ்​2 தேர்வு முடிவு மே மாதம் 14​ந்தேதி வெளியாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் மே 25​ந்தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று வெளியிட்டார். உலக புத்தக தினம் விழா சென்னை எழும்ர் கன்னி மாரா நூலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான 2 நாட்கள் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று தொடங்கி வைத்தார். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பிளஸ்​2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டனர். அதற்கு சபீதா பதில் அளித்து கூறியதாவது:​ பிளஸ்​2 தேர்வு முடிவுகள் மே 14​ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25​ந்தேதி வெளியிடப்படும். பிளஸ்​2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டன. எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தேர்வு முடிவுகள் அரசு சார்பில் பள்ளிக்கல்வி இணைய தளத்தில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் மாணவர்கள் முடிவை பார்க்க முயற்சிக்கும்போது, அது முடங்கி விடுகிறது. தேர்வு முடிவை உடனே அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள்​பெற்றோரின் சிரமத்தை தவிர்க்க கூடுதலாக மேலும் சில இணைய தளங்களில் பிளஸ்​2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago