எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.28 - கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட கிருஸ்தவர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அவர்கள் இந்த இயக்கத்தின் மீது அன்பை பொழிகிற காரணத்தால், பொறாமை காரணமாக சகிக்க முடியாமல் என் மகள் மீது எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்று தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் கருணாநிதி கனிமொழிக்கு சப்போர்ட் செய்து பேசினார். இது குறித்த விபரம் வருமாறு-
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் கனிமொழி பற்றி முதல் அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டு மென்று கருதுகிறவனும் அல்ல. நானே கைது செய்யப்பட்டபோது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.
நான் இன்று (நேற்று) காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 17 ஆயிரத்து 2 பேர் துத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 5 ஆயிரத்து 77 பேர் nullலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர். இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது.
இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள். எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.
சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதை யெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப் படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயி லிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்ககாத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன். அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்.
மேலும் கருணாநிதி பேசும்போது காங்கிரஸ் கட்சியை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. காங்கிரசின் தயவு நமக்கு தேவை. தேர்தல் எதுவும் இப்போது வரப்போவதில்லை. அதற்கு இன்னும் காலம் உள்ளது எனவே அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை
02 Jul 2025டாக்கா : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடங்கினார் சுக்லா
02 Jul 2025நியூயார்க் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை சுபான்ஷூ சுக்லா தொடங்கினார்.