திருவனந்தபுரம், மே. 18 - குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை ஸ்ரீசாந்தை குற்றமற்றவராகவே நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ்ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் கேரளாக்காரர். எனவே, அவரது கைது பற்றிய செய்தி வெளியானது, கேரள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர் தவறு செய்திருந்தால் அது மாநிலத்திற்கே அவமானம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து, கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி சசி தரூர் கூறுகையில்,
ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டது கவலை அளிக்கிறது. சிறந்த வீரரான அவர் கேரளாவின் பெருமைக்குரியவர். எனவே, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றமற்றவராகவே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஸ்ரீசாந்த் ்ஈடுபடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற தவறுகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். ஸ்ரீசாந்த் தவறு செய்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவின் சிறப்பு மிக்க வீரரான அவரைப் பற்றி வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனா என்று கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் மேத்யூ கருத்து தெரிவித்துள்ளார்.