முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதந்தியை பரப்புகிறது மம்தா கட்சி முதல்வர் புத்ததேவ் கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

கஜ்ஜூரி,மே.- 1 - வதந்தியை பரப்பிக்கொண்டியிருக்கிறது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி என்று மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜியார் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. இன்னும் 3 கட்ட தேர்தல்கள் பாக்கியுள்ளன. இந்தநிலையில் மேற்குவங்கத்தில் உள்ள பிரச்சினைக்குரிய நந்திகிராமில் இருந்து சற்று தொலைவில் உள்ள கஜ்ஜூரி என்ற இடத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜியார் பேசினார். அப்போது அவர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸை ஒரு பிடி பிடித்தார். இந்த கூட்டத்தில் புத்ததேவ் மேலும் பேசியதாவது:-
நந்தி கிராமத்தை மற்றொரு ஹால்டியாவாக்க நாங்கள் நினைக்கிறோம். காரணம் ஹால்டியா ஒரு வளர்ந்த நகரம். தொடர்ந்து அந்த நகரம் செழிப்பை பெறும். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்படி அதை நாங்கள் உருவாக்கினோம். ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது. தவறான செய்திகளையும் வதந்திகளையும் பரப்புகிறது. நந்திகிராமத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கிறது. நாங்கள் நந்திகிராமத்தில் நிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்தபிறகும் அவர்கள் கலகம் மூட்ட நினைக்கிறார்கள். எனவே சிண்டுமுடியும் வேலையை மம்தா கட்சி நிறுத்த வேண்டும். கலவரத்தை ஏற்படுத்த நினைக்கக்கூடாது. வேலைவாய்ப்பு அளித்து தொழிற்சாலைகளை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு புத்ததேவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago