முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு முடிவு மே.9-ந் தேதி வெளியீடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்

சென்னை, மே.- 1 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் (மே) 9-ந் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச்.2-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த  தேர்வை 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர்களும், மாணவிகள் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர்களும் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் பள்ளி கல்வி செலாளர் சபிதா கடந்த 20-ந் தேதி நிருபர்களிடம் பேசும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைபோல் வரும் மே.14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார். பள்ளி கல்வி கல்வித்துறையின் செயலாளரின் இந்த அறிவிப்பை கண்டித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பிளஸ் 2 தேர்வு முடிவை முதலமைச்சர் ஆலோசனைப்படி, கல்வி அமைச்சர் தான் அறிவிப்பார். அரசு செயலாளரின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும்  பரபரப்பு ஏற்பட்டு, மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிளஸ் 2  தேர்வு முடிவுகள் வரும் 9-ந் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
மார்ச் 2011-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் 9ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை வெளியிடப்படும். தேர்வெழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மார்ச், ஏப்ரல் 2011-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால், பணி முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்