முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் பாலசந்தருக்கு கருணாநிதி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      சினிமா

சென்னை, மே.​ - 1 - பிரபல தமிழ் பட இயக்குனர் பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஸ்டாலின் பாலசந்தரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்துக் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளிவீசி வருபவரும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கித் தயாரித்தவரும், பல படங்களுக்கு ஏற்கனவே தேசிய விருதுகளும் ​ மத்திய அரசின் பத்மஸ்ரீவிருதும், தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவரும், தமிழ்த் திரையுலகில் பழுத்த அனுபவமும், ஏகோபித்த புகழும் கொண்டவரும், nullநீண்டநெடுங்காலமாக எனக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்பவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக மத்திய அரசு 2010-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
தாதா சாகேப் பால்கே விருது பெறும் முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் என்பது கூடுதல் சிறப்பாகும். அருமை நண்பர் கே.பாலசந்தர் தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்பு முனையை ஏற்படுத்தியவர். தமிழ்த் திரைப்படப் பரிணாமத்தில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலும் மறுத்திட இயலாது. கே.பாலசந்தருக்கு இந்த விருதின் மூலம் அகில இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு எனது உள்ளம் பேருஉவகை கொள்கிறது. நண்பர் கே.பாலசந்தருக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.மேலும் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள இயக்குநர் பாலசந்தர் வீட்டுக்கு நேரில் சென்று தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago