பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிறையில் அடைப்பு

RAJ6

சென்னை, மே.3 - சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஆம்ஸ்ட்ராங் கைதை கண்டித்து அவரது ஆதாரவாளர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் பாரிமுனை பகுதியில் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் கடந்த 2008​ம் ஆண்டு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆம்ஸ்ட்ராங் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. 

நேற்று பிற்பகல் ஆம்ஸ்ட்ராங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு ரமேஷ் வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் ஆஜர் செய்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை இன்று சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு nullநீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு முழுவதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.   ஆம்ஸ்ட்ராங் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவதை அறிந்ததும் காலை 10 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கோர்ட்டு முன்பு குவிந்தனர். ஆம்ஸ்ட் ராங் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் கோர்ட்டு வாசல் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 100​க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடம் போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறினார்கள். 

இதையடுத்து தொண்டர்கள் அங்கிருந்து சென்று நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.   இதற்கிடையே பகல் 12 மணிக்கு ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஜார்ஜ்டவுன் 7​வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன்பு ஆஜர்படுத்தினார்கள். ஆம்ஸ்ட்ராங் சார்பில் வக்கீல் சந்திரபாபு ஆஜராகி வாதாடினார். 

அப்போது அவர் கூறுகையில். ஆம்ஸ்ட்ராங் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலீசார் நேற்று கைது செய்தவிதம் முறையற்றது. அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து மாஜிஸ்திரேட்டு சாந்தி கூறும்போது, இந்த வழக்கு துவக்க நிலையில் உள்ளது. 

அதனால் முக்கிய கருத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதுடன் வருகிற 12​ந் தேதி வரை nullதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன் என்றார். இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து கோர்ட்டு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் nullநீண்ட வரிசையில் காணப்பட்டன. போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பகல் 1.20 மணி அளவில் ஆம்ஸ்ட்ராங்கை கோர்ட்டில் இருந்து போலீஸ் வேனுக்கு அழைத்து வந்தனர். 

அப்போது மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் போலீஸ் வேனை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலர் கையால் வேன் கண்ணாடியை தட்டி னார்கள். பாட்டிலை எடுத்தும் வேன் மீது வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி ஆம்ஸ்ட்ராங்கை பாதுகாப்புடன் வேனில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே தி.மு.க.வை  எதிர்த்து தங்கள் தலைவர் போட்டியிட்டதால் அவரை வாபஸ் வாங்க சொல்லி விலை பேசினார் அதற்கு எங்கள் தலைவர் ஒத்துகொள்ளாததால் இந்த நடவடிக்கை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ