முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை - 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆமதாபாத்,பிப்.23 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை இந்த அணி எடுத்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஷேன்வாட்சன் சிறப்பாக விளையாடி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற பெயரை நிலைநாட்டினார்.

92 பந்துகளில் அவர் 79 ரன்கள் குவித்தார். கடந்த உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் விளையாடியதை போலவே இந்த ஆண்டில் வாட்சன் விளையாடத் தொடங்கியுள்ளார். ஹேடின் 29, கேப்டன் பாண்டிங் 28, வொயிட் 22 ரன்களை சேர்த்தனர். துணை கேப்டன் கிளார்க் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 58 ரன்களை குவித்தார். 55 பந்துகளில் அவர் இந்த ரன்களை எடுத்தார். இதில் 4 பந்துகளை அவர் பவுண்டரிக்கு விளாசியிருந்தார். 

ஜிம்பாவே தரப்பில் மோபு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரைஸ் உத்சேஆ, கிரெமர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். பின்னர் ஆடிய ஜிம்பாவே வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் புயல் வேக பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பவுலியன் திரும்பினர். 46.2 ஓவர்களில் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஷான்டெய்ட், பிரெட்லீ, மிட்செல், ஜான்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ஜிம்பாவே வீரர்களை தடுமாற வைத்தனர். குறிப்பாக ஜான்சனின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்