முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனவிலங்கு வாரவிழாவை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.29 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி வனத்துறையில் பல்வேறுவளர்ச்சி திட்டங்கள்தீட்டப்பட்டு செயல் படுத்தப்படுகின்றன. அந்ததிட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடந்த 26.09.2013 சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சீராய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், மற்றும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முன்னிலைவகித்தார்கள்.

கூட்டத்திற்கு தலைமைவகித்து ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் பேசியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல்வேறுதிட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.  அந்ததிட்டங்களை அதிகாரிகள் மிகுந்த அக்கறையோடும், ்டுபாட்டோடும் தொய்வில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடையூறுகள்வந்தால் அதைஅந்தந்தமாவட்டஆட்சித்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுபோய்திட்டத்தை விரைவாகநிறைவேற்ற வேண்டும்.வனத்துறையின் பணிகளை தீவிரமாகஆற்றுவதற்கு வசதியாக புதியதாக 113 ஜீப்புகளை வழங்கியுள்ளார்கள்.அவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி வனத்துறை பணிகளைசிறப்பாக செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வனவிலங்கு வாரவிழா அக்டோபர் 2-ம் தேதி முதல்  ஒரு வாரகாலத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தவாரவிழாவை அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், விமரிசையாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வனவிலங்கு வார தொடக்கவிழா கோயம்புத்துட்ரில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கஉள்ளது.  இவ்விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் செ.தாமோதரன், , சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்,  கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.கருணாகரன், ஆகியோர் கலந்துகொள்கிறார்.

நிறைவு விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அக்டோபர் 8-ம் தேதி மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி , சென்னை மாநகர மேயர் சைதைஎஸ்.துரைசாமி, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இரண்டு விழாக்களிலும் வனத்துறை அமைச்சர் சிறப்புரைஆற்றுகிறார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) மற்றும்  முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் லட்சுமிநாராயன் மற்றும் வனஉயிரினக் காப்பாளர்,  நாடாளுமன்றசட்டமன்றஉறுப்பினர்கள்மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மாநில அளவில் மாணவ, மாணவியர்களிடையேநடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்தநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்தவிழாக்களை வனத்துறை அலுவலர்கள் சிறப்பாகநடத்த வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வாய்வு கூட்டத்தில் லட்சுமி நாராயண், முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் மற்றும் வனஉயிரினக் காப்பாளர் மற்றும் ஆர்.கே.ஓஜா, கூடுதல் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (திட்டம் மற்றும் பட்ஜெட்) மற்றும் உயர் அதிகாரிகள்கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony