முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு ரயிலை ஓட்டி 2 பெண் டிரைவர்கள் சாதனை

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

திருச்சி. செப்.29 - சரக்கு ரயிலை ஓட்டி 2 பெண் டிரைவர்கள் சாதனை புரிந்துள்ளனர். திருச்சி ரயில்வே கோட்டத்தில் முதல் முறையாக இரு பெண் டிரைவர்கள் சரக்கு ரயிலை விருத்தாசலத்துக்கு ஓட்டிஇந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருக்குத் துணையாக மற்றொரு பெண்ணும் சேர்ந்து துணிச்சலாக இதை இயக்கியுள்ளனர். இவர்கள் இந்த ரயிலை விருத்தாசலத்திலிருந்து, ஈச்சங்காட்டில் உள்ள சிமென்ட் ஆலைக்கு சரக்கு ஏற்ற இந்த ரயிலை ஓட்டிச் சென்றனர்.

அங்கு சரக்கு ஏற்றிய பிறகு அங்கிருந்து புறப்பட்ட இந்த ரயில் விருத்தாச்சலம் வந்தது. இந்த ரயிலை இயக்கியவர் நெல்லையைச் சேர்ந்த நாராயணவடிவு ஆவார். இவர் ரயில்வேயில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். துவக்கத்தில் என்ஜின் உதவி  டிரைவராகப்  பணிபுரிந்த இவர் பின்னர் ரயில் நிலையத்தில் என்ஜினை மட்டும் இயக்கி வந்தார். தற்போது சரக்கு ரயில் டிரைவராகப் பணியாற்றுகிறார்.

இவருக்கு உதவியாளராக தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் உடன் வந்தார். இவர் பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகிறது.

                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony