முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி உத்தரவை கேட்டு காதல் ஜோடி தப்பி ஓட்டம்

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.23 -  போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து ஐகோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட காதல் ஜோடி தப்பி ஓடினர்.

   தஞ்சாவூர் மாவட்டம் பழையபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, எனது மகள் புனிதாவை கடந்த ஜனவரி 11 ம் தேதி திருவெரும்பூரை சேர்ந்த மணி மகன் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து காவல் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கடத்தி சென்ற ஜெயச்சந்திரன், ஏற்கனவே 7 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். எனவே எனது மகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்றார்.

   இந்த மனு நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், சுதந்திரம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. போலீசார் ஜெயச்சந்திரனையும், புனிதாவையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் ஜெயச்சந்திரனுக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மார்ச் 21 ல் திருமணம் நடைபெற்றதற்கான திருமண அழைப்பிதழை முத்தழகனின் வக்கீல்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் ஜெயச்சந்திரன் புனிதா இருவரும் நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்