Idhayam Matrimony

சமையல் எரிவாயுவிற்கு நேரடி மானியம் கூடாது: முதல்வர்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை.அக்.1 - சமையல் எரிவாயு சிலிண்டர்களுக் கான மானியத்தை பணமாக நுகர்வோருக்கு வழங்கும் திட்டத்தை முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்..

இந்த திட்டம் மாநில அரசின் உரிமைகளை மீறுவதாகும் என்றும் முதலமைச்சர், பிரதமருக்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர  நேற்று எழுதியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசு திட்டங்களின் மானிய பணத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும ,மானியத்திற்கு பதில் நேரடி பணப்பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டதற்கும,எனது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்து ஏப்ரல் 27ம் தேதி நான் தங்களுக்கு  கடிதம் எழுதியதை நினைவு கூற விரும்புகிறேன்.? 

தமிழ்நாட்டில் இதுபோன்ற நேரடி பணம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு சில வகைகளுக்கு மட்டும் அமல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகை, பேறு கால உதவி, சமூக பாதுகாப்பு உதவித் தொகை போன்றவற்றிற்கு இவற்றை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக மாநில அரசு அனைத்து வகை முன்ஏற்பாடு களையும் செய்து முறையாக இந்த திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. அவை முழுமையாக கண்காணிக் கப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது போல அனைத்து திட்ட மானியங்களையும் மக்களுக்கு நேரடியாக வழங்குவது என்பது இயலாத காரியம். வங்கிகள் போதுமான ஊழியர்களை நியமனம் செய்து மக்களுக்கு வழங்கும் வசதி செய்யப்படவில்லை. எனவே இதை செயல்படுத்துவது எளிதானது அல்ல.

நேரடி பண மாற்றம் திட்டம் குறித்து நான் ஏற்கனவே 2 வித எதிர்ப்புகளை தெரிவித்தேன். இந்த திட்டத்தை பொது வினி யோகம், உர மானியம், மண்எண்ணை மானியம் போன்றவற்றிக்கு பயன்படுத்த கூடாது என்று கூறியிருந்தேன்.

ஏன் என்றால் இந்த திட்டம் வழங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டிய முக்கியமானது ஆகும். இதில் நேரடி மானிய திட்டம் சரியாக இருக்காது. மேலும், மத்திய அரசு மாநில அரசு மூலம் இதை செயல்படுத்தாமல், வங்கி மூலமாக நேரடியாக வழங்கு வது மாநில அரசுகளை மீறி தனி வழியில் செல்வதாகும். இது இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மத்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிக்கு எதிரானது.அரசியல் சட்டத்தை மீறு வதாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேரடி மானிய திட்டத்தை முதல் கட்டமாக அமல் படுத்து வதற்கு அரியலூர், புதுக் கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இப்போது மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தமிழக அரசுக்கு 7.9.2013_ல் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில் 2_வது கட்டமாக சமையல் கியாஸ், நேரடி மானிய திட்டத்தை இந்தியா முழுவதும் 235 மாவட்டங் களில் அமல்படுத்தப் போவ தாகவும், அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 மாவட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 1.1.2014 முதல் அமலுக்கு வரப்போவ தாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நான் எனது கடுமையான எதிர்ப்நிப தெரிவித்துக் கொள்கிறேன். சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்துக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சமையல் கியாஸ் மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இது தேவையான நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். நேரடி பண மாற்றம் மூலம் உரிய நேரத்தில் உதவி கிடைக்காது.

மேலும், சமையல் கியாஸ் நேரடி மானியம் ஆதார் எண் பெற்றவர்களுக்கு தான் வழங்கப்படும். ஆனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆதார் எண் வழங்கப்படும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடக்கிறது. இதில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆதார் அட்டை பெற தகுதியுடைய 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை 2 கோடியே 52 லட்சம் பேருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.இப்படி இருக்க இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். இதில் குழப்பமும், பொது மக்களுக்கு தொல்லையும் தான் ஏற்படும். இந்த திட்டத்தை அமல் படுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கி இருக்கிறார்கள். 3 மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெறாதவர்கள் எப்படி கியாஸ் நேரடி மானியத்தை பெற முடியும்.

ஆதார் அட்டையை எந்த ஒரு சேவை பணிக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படி இருக்க நேரடி மானிய திட்டத்துக்கு அதை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமாக அமைகிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்எண்ணை அளவு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமம் மற்றும் சிறு நகர பகுதிகளில் மக்கள் சமையலுக்கு விறகு மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

நான் ஏற்கனவே மத்திய அரசு திட்ட பயனாளிகளை அடையாளம் காணுவதற்கு மாநில அரசின் நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். ஆனால் கியாஸ் நேரடி மானிய திட்டத்திற்கு அதை மீறி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இந்த திட்டத்தை பொறுத்தவரையில் மாநில அரசுகளுடன் கலந்து பேசிதான் முடிவு எடுக்க வேண்டும்.

ஆதார் அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், பாங்கிகளில் உரிய வசதிகள் செய்து தரப்படாத நிலையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியாக இருக்காது. மேலும், கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவுகளுக்கும் எதிராக இது அமைந்துள்ளது.இதனால் உரிய உத்தரவாதம் அளிக்கும் வரையில் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago