முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் பட்டாபிஷேக ஓவியம்-திப்பு சுல்தான் வாள் லண்டனில் ஏலம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக். 4 - லண்டனில் ராமர் பட்டாபிஷேக ஓவியம் மற்றும் திப்பு சுல்தான் வாள் உட்பட90 கலை பொருட்கள் வரும்9 ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

லண்டன் அருங்காட்சியகத்தில் இந்தியாவின் அரிய கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவை பிரிட்டீசார் ஆண்ட போது இவை அங்கு கொண்டு செல்லப்பட்டவை. இதில் விலை மதிக்க முடியாத ராமர் பட்டாபிஷேக ஓவியமும், திப்பு சுல்தான் வாளும் குறிப்பிடத்தக்கவை. ராமர் பட்டாபிஷேக ஓவியம் தங்கத்தால் வரையப்பட்டுள்ளது. இதே போல் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் போரில் பயன்படுத்திய வாளும் விலை மதிக்க முடியாத கலை பொருளாகும். ராமர் பட்டாபிஷேக ஓவியம் ரூ. ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திப்பு சுல்தானின் போர் வாள் ரூ. 80 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே20 லட்சம் வரை ஏலம் போகலாம் என்று கலை பொருள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல ஏலம் விடப்படும் மற்ற பொருட்களும் அதன் மதிப்பும் வருமாறு:

மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய வைரங்கள், தங்க தாம்பாளம், தங்க கவசம், 17 ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க முலாம் பூச்சுடன் மரகதம் மற்றும் சிவப்பு கற்கள் பொறிக்கப்பட்ட குத்துவாள் இவை உட்பட மொத்தம்90 வகையான கலை  பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony