முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ஸ்டாக்ஹோம், அக். 12 - கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் மன்றோ இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றுள்ளார். அவரை தேர்வு செய்த ஸ்வீடன் இலக்கிய கழகம் சமகால இலக்கிய மேதை என்று அவரை வர்ணித்துள்ளது. 

அலைஸின் தெளிவும், நிதர்சனமும் நிறைந்த அழகிய கதை சொல்லும் பாங்கு, அவரை சிறுகதை உலகின் தலை சிறந்த எழுத்தாளர் என்று சொல்ல வைக்கிறது என்று அந்த அமைப்பு பாராட்டியுள்ளது. 82 வயதாகும் அலைஸ் மன்றோ, இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லும் இரண்டாவது கனடா நாட்டு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக 1976 ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற சால் பெல்லோ கனடாவில் பிறந்து சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலைஸ் மன்றோருக்கு பரிசு தொகையாக 12 லட்சம் டாலர்கள் வழங்கப்படும். நோபல் பரிசுக்கு முன்னரே 2009 ம் ஆண்டு இங்கிலாந்தின் மேன் புக்கர், சர்வதேச பரிசை அலைஸ் மன்றோ வென்றுள்ளார். மேலும் கனடாவின் உயரிய இலக்கிய விருதான கவர்னர் பரிசை இவர் மூன்று முறை வென்றுள்ளார். சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மே யானுக்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்