முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று புத்த பூர்ணிமா - மராட்டிய கவர்னர் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,மே.17 - இன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன் அம்மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் புத்தர் அஹிம்சைகளை போதித்தார். அவருடைய வாழ்க்கை உண்மையான, சத்தியமான வாழ்க்கை. அதை இந்திய மக்கள் மட்டுமல்ல, உலக மக்களும் உணர்ந்து போற்றுகிறார்கள் என்று மராட்டிய கவர்னர் கூறியுள்ளார். சுதந்திரத்திற்காக போராடிய போது புத்தரின் உண்மை மற்றும் அஹிம்சை கருத்துக்களால் மகாத்மா காந்தியே ஈர்க்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony