முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தல் வழக்கு: இந்தியர் உள்பட 11 பேர் கைது

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், டிச.19 - சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தியதாக இந்தியர் உள்பட 11 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 மில்லியன் ரிங்கிட் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.66 கோடி ) மதிப்பிலான போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கிளாங் பள்ளதாக்கு மற்றும் நிலாய் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டதையடுத்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துணை ஆய்வாளர் மொகமது பக்ரிஸினின் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 11 பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சிலரும் உள்ளதாக ஸினின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony