முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளிகாம்பாள் கோயிலில் ரஜினி நலம் பெற்றுவர நடந்த சிறப்புப் பிரார்த்தனை

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற்று மீண்டும் அதே உற்சாகத்துடன் திரும்ப வேண்டி, சென்னை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் சிறப்பு nullஜை மற்றும் பிரார்த்தனை நடந்தது. ரஜினிக்காகப் பிரார்த்தனை நடந்த அதே நேரம், தமிழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் தலைவருக்காக சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். ரஜினி நலம் பெற சிறப்புப் பிரார்த்தனை என்ற அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த வாசக நண்பர்களும், மிகுந்த ஆர்வத்தோடும் அக்கறையோடும் விசாரித்தனர். நேரில் வரவும் விருப்பம் தெரிவித்தனர். நண்பர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே தங்கள் பிரார்த்தனைகளை மேற் கொள்ளலாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டது.
ஜெர்மனி, நியூஸிலாந்து, லண்டன், நார்வே, இலங்கை, பாரிஸ், நியூயார்க் என உலகின் 13 நாடுகளிலும் இதே நேரத்தில் பிரார்த்தனை செய்தனர் ரஜினி ரசிகர்கள்.
சிதம்பரத்திலிருந்து நகர ரஜினி மன்றத்தின் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நண்பர்கள் நேரில் வந்து nullஜையில் பங்கேற்றனர். இந்த nullஜைக்காக விளாமிச்சி வேரால் தயாரிக்கப்பட்ட விசேஷ மாலையை அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
முதலில் ரஜினி நலம்பெற வேண்டி 61 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நெய்தீபங்களை ஏற்றுவதில் என்வழி நண்பகளோடு, பொதுமக்களும் குறிப்பாக தாய்மார்களும் சகோதரிகளும் தாங்களாக முன்வந்து ரஜினிக்காக வேண்டியபடி தீபம் ஏற்றியது நெகிழ வைத்தது.
அடுத்ததாக அன்னை காளிகாம்பாள் சந்நிதியில் தலைவரின் திருவோண நட்சத்திரம், மகர ராசிக்கு சிறப்பு nullஜை நடத்தப்பட்டது. அனைவரும் மனமுருக அன்னையிடம் தங்கள் 'அண்ணன்' நலம் பெற வேண்டிக் கொண்டனர்.
அன்னைக்கு விளாமிச்சை மாலை, எலுமிச்சை மாலை மற்றும் தாமரை மாலைகள் சாத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம். வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கலுக்கான காரணத்தைக் கேட்ட அனைவரும் ரஜினி விரைந்து நலம்பெற்று வர மனமாற வேண்டிக் கொண்டனர்.
பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளை என்வழி இணையதள ஆசிரியர் சங்கர் (வினோ), ஜெ ராம்கி, சந்தோஷ், கலிஃபா, ஸ்ரீதர், சோளிங்கர் மன்றம் நா கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.  கோலிவுட் டுடே பிரவீண்குமார், ரஜினி ரசிகர்கள் ஆர் வி சரவணன், ஆனந்த், முத்து, செந்தில்பாபு, ரமேஷ்குமார், கண்ணன், தீபக், சபாபதி, நடராஜ் என ஏராளமானோர் இந்தப் பிரார்த்தனையில் பங்கெடுத்துக் கொண்டனர்.
காளிகாம்பாள் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை பிரசாதங்கள் அன்று மாலையே ரஜினி வீட்டில் ஒப்படைக்கப்பட்டன.
ரஜினியின் உதவியாளர் கணபதி அவற்றைப் பெற்றுக் கொண்டதும், இன்று இரவு தலைவரைப் பார்க்க குடும்பத்தினர் சிலர் சிங்கப்nullர் செல்கிறார்கள். அவர்கள் இந்தப் பிரசாதத்தை தலைவரிடமே கட்டாயம் நேரில் சேர்ப்பார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், டாக்டர்களின் முயற்சிகளையும் மீறி, இந்த மாதிரி பிரார்த்தனைகள்தான் அவரைக் காத்துள்ளது. இப்போது எல்லாமே சரியாகிவிட்டது. ஆபரேஷன் இல்லாமலே ரஜினி சார் வேகமாக குணமடைந்து வருகிறார். அதிகபட்சம் இன்னும் ஐந்தே நாட்களில் அவர் சரியாகி விடுவார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony