முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மேயர் - கமிஷனர் மீது லஞ்ச வழக்கு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை, ஜூன்.18 - மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க லஞ்சம் பெற்றதாக மதுரை தி.மு.க. மேயர்தேன்மொழி ,மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஊழல், வன்முறை, கொள்ளை, கொலை , அரசு நிலங்கள்,தனியார் நிலங்கள் ஆக்கிரமிப்பு சமூக விரோத செயல்கள் தலைவிரித்தாடியது.  உள்ளாட்சிகளில் திமுக வெற்றி இடங்களில் திமுகவினர் கடை ஏலம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். திமுகவின் உச்சக்கட்ட ஊழலான ஸ்பெக்டரம் வழக்கில் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் எதிரொலியாக திமுகவினரின் பல்வேறு ஊழல்களை பாதிக்கப்பட்டவர்கள் புகார் மூலம் வெளி கொண்டுவர துவங்கி உள்ளனர். 

   ஏமதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, மதுரை மாநகராட்சி 9வது வார்டு மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு பின்புறம் உள்ள காலியிடத்தை ஆக்கிரமித்து மதிச்சியத்தில் இருக்கும் சுந்தர்ராஜன் மனைவி ரங்கம்மாள் கட்டிடம் கட்டி வந்தார். இது குறித்து மதுரை மேயர் தேன்மொழி, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தேன். அதன்பின் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுவிட்டதாக எனக்கு பொய்யான தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. நான் தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக கடந்த ஜனவரி 10 ம் தேதி மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே மேயர் ,கமிஷனர், காண்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளை ஆகியோர் கூறியதின் பேரில் சர்வேயர் குருசாமி கட்டிடம் கட்டும் ரங்கம்மாளிடம் லஞ்சமாக பணம் வாங்கினார் என்று தெரியவந்தது. இதற்கிடையே நான் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்த விவரம் தெரிந்த ஆக்கிரமிப்பாளர்கள் என்னுடன் போட்டி போட முடிவு செய்து, ஆக்கிரமித்தது போக மீதமிருந்த இடத்திலும் வீடுகட்டுவோம். அதற்கு தேவையான ஆவணங்களை போலியாக தயார் செய்வோம் என்று கூறினர். எனவே, அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யும் படி போலீசாருக்கு உத்தரவிடும் படி ஐகோர்ட் கிளை உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜேம்ஸ் டேவிட் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார். முடிவில் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை நடத்தி ஜூலை 15ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயர் தேன்மொழி, கமிஷனர் ஜெபாஸ்டின், நகர அமைப்பு அதிகாரி முருகேசன், உதவிக்கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள், காண்ட்ராக்டர் உட்பட 13 பேர் மீது 120(பி) கூட்டுச்சதி, 13(1பி), 13(2) ஆகிய லஞ்ச தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திமுக மேயர் தேன்மொழி மற்றும் கமிஷனர் செபாஸ்டினிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago