முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இலங்கை கப்பல் போக்குவரத்தால் அகதிகள் திரும்புதல் அதிகரிக்கும்: ஐ.நா

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு,ஜூலை.-18- இந்தியா, இலங்கை இடையே துவக்கப்பட்டுள்ள  கப்பல் போக்குவரத்தால் அகதிகள் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை பிரதிநிதி மைக்கோல் ஸ்வாக் அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையை கொழும்பில் உள்ள ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வு தூதரகம் வெளியிட்டுள்ளது. 

அதில் தூத்துக்குடி, கொழும்பு இடையேயான கப்பல் போக்குவரத்தால் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் அவர்களது நாட்டுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து துவங்கியது முதல் இலங்கைக்கு அகதிகள் திரும்புவது சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் இது இன்னும் அதிகரிக்கும். மேலும் இந்தியா இலங்கை இடையே சுற்றுலா பயணிகள் போக்குவரத்தும் அதிகரிக்கும். 

அது போல் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நடுத்தர அளவிலான ஜவுளி வர்த்தகம் இதனால் அதிகம் பலன் அடையும். பல்வேறு நாடுகளில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இவர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 800 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்