முக்கிய செய்திகள்

சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையை வெளியிட உத்தரவு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - மாணவர்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வி அடிப்படையிலான தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரைச் சேர்ந்தவர் நெல்லையன். இவரது மகன் ராம்பிரசாந்த். இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:​

நான், கடந்த மே மாதம் பிளஸ்​2 தேர்வில் பாஸ் செய்தேன். நான் வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களில் 200 மார்க்குக்கு 184 மார்க் பெற்றுள்ளேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

பொறியியல் கல்வி படிப்பதற்காக விண்ணப்பித்தேன். இதற்கான கவுன்சிலிங்கிற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது. கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்க்க விரும்பினேன்.

எனவே ஒவ்வொரு கல்லூரியின் மாணவர் தேர்ச்சி விகிதம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற விவரங்கள் பற்றி அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்டேன். ஆனால் அந்த விவரங்கள் தரப்படவில்லை. அவற்றை பல்கலைக்கழகம் வெளியிடவுமில்லை.

இதனால் நானும், மற்ற மாணவர்களும், எது படிப்புக்கு சிறந்த கல்லூரி என்பதை அறிந்து கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீnullதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். இந்த மனுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதுபோன்ற விவரங்களை வெளியிடுவதற்கு சட்டப்nullர்வமான உத்தரவுகள் எதுவுமில்லை. எனவே எங்களை இந்த விவரங்களை வெளியிட நிர்ப்பந்திக்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய விவரங்களை பல்கலைக்கழகம் கொடுக்க முடியாவிட்டாலும், அந்த கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருக்கும். எனவே அதை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மாணவர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட  நீnullதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது​:

சரியான காரணத்துக்காகவும், தேவையான விவரங்களை பெறுவதற்காகவும்தான் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே இணைப்பு பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளின், கல்வி அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது கட்டாயம். அது மாணவரின் நலனுக்கு உகந்தது.

தமிழகத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 500​க்கும் மேலாக உள்ளது. இந்த கல்லூரிகளில் தேர்வை நடத்துவது அண்ணா பல்கலைக்கழகம்தான். எனவே அந்தக் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம், கல்வித் தரம் பற்றிய விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்திடம் இருக்கும்.

எனவே இன்னும் 2 நாட்களில் அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர், பதிவாளர் ஆகியோரிடம் இந்த விவரங்களை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரப்பட்டியலை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: