முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா ஹசாரே உடல்நிலை கடும் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.26 - ஊழலை ஒழிப்பதற்காக ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 10 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மத்திய அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்துக்கும், எம்.பிக்கள் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று காலை 9.30 மணியளவில் டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். பின்னர் டாக்டர் நரேஷ் டிரகன் கூறுகையில், 

ஹசாரே உடல் நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நலம் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது என்றார். மேலும் டாக்டர்கள் குழு ஒன்று ஹசாரேவை கண்காணித்து வருகிறது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதித்து வரும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே ராம்லீலா மைதானத்தில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹசாரேவின் உடல் நிலை அபாயகட்டத்தை எட்டும் போது அவர்கள் அதிரடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. போலீசார் அப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று ஹசாரே தன் ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony