முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உறுப்புக்கள் விற்பனை - பார்லி.யில் பா.ஜ.க. கவலை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.27 - சட்டவிரோதமான முறையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும் மனித உறுப்புக்கள் விற்கப்படும் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, இது போன்ற ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதா மீதான விவாதத்தை துவக்கி வைத்து பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பிரபாத்ஜா பேசினார். அப்போது பேசிய அவர், 

உலகிலேயே சட்டவிரோதமான முறையில் மனித உறுப்புக்கள் விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒரு பெரிய நாடாகி விட்டது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தூக்கில் போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நித்தாரி சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அப்போது ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டு உடலுறுப்புகள் விற்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். ஊழலில் பெரிய நாடு என்பது போல மனித உறுப்புக்கள் விற்பனையிலும் பெரிய நாடாகி விட்டதோ இந்தியா? என்றும் அவர் ஆச்சரியத்தோடு வினவினார். உடல் உறுப்புக்களை பலர் தானம் செய்கிறார்கள். அவர்களை பற்றி தேசிய அளவில் ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அது மிக மிக அவசியம் என்றும் பிரபாத்ஜா வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago